போர் களத்தில் உங்களை சந்திப்போம்; மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி பதில்

போர் களத்தில் உங்களை சந்திப்போம் என நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிடும் மம்தாவிடம் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

Update: 2021-03-06 00:41 GMT
மிட்னாப்பூர்,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக வருகிற 27ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.  இறுதி கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 29ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதியும் நடைபெறும்.

இதனை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 291 பேர் கொண்ட பட்டியலை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார்.  அதில், நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட மம்தா முடிவு செய்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டில் இருந்து மம்தா பானர்ஜி, நடப்பு பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

அவர் பா.ஜ.க.வை மாநிலத்தில், வெளியே இருந்து வந்த கட்சி என கூறி வருகிறார்.  இந்நிலையில், கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் கீழ் வருகிற நந்திகிராம் தொகுதி மக்களிடம் பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி பிரசாரத்தில் பேசினார்.

அதில், அவரை வரவேற்கிறேன் என கூறிய அதிகாரி, மிட்னாப்பூரின் மகன் எங்களுக்கு வரவேண்டும்.  வெளியாட்கள் அல்ல.  உங்களை போர் களத்தில் நாங்கள் சந்திக்கிறோம்.  வருகிற மே 2ந்தேதி நீங்கள் தோற்று வெளியேறுவீர்கள் என பேசினார்.

மேலும் செய்திகள்