ஒடிசாவில் விமானத்தில் இருந்து ஏவுகணை சோதனை

ஒடிசாவில் விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

Update: 2021-03-06 00:16 GMT
பாலசோர்,

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராம்ஜெட் என்ற ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் இச்சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது, தரைத்தளத்தில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு சாதனங்களும் எதிர்பார்த்தபடி இயங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம், வானில் இருந்து வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்ல ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரிக்க வழி பிறந்துள்ளது.

மேலும் செய்திகள்