புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இன்று புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-05 10:23 GMT
ஒடிசா,

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (டிஆர்டிஓ) ராணுவத்திற்கு தேவையான ஏவுகணை உள்ளிட்ட தளவாடங்களை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. அவ்வகையில், ரஷியாவுடன் இணைந்து திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை (எஸ்எப்டிஆர்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணையை சோதனை செய்துவருகிறது.

இந்நிலையில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையானது, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதில் திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இன்றைய சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். பூஸ்டர் மோட்டார் உள்ளிட்ட அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினர்.

மேலும் செய்திகள்