கர்நாடக வக்கீல்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடக வக்கீல்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-04 22:25 GMT
பெங்களூரு,

பெங்களூரு நகர வக்கீல்கள் சங்க தலைவர் ஏ.பி. ரங்கநாத் ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ஓகாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், டெல்லியில் வக்கீல்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல கர்நாடக மாநிலத்திலும் வக்கீல்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே. ஓகா தாமாக முன்வந்து ஏற்று விசாரணை நடத்தினார். பின்னர், டெல்லியை போலவே, கர்நாடகத்திலும் வக்கீல்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்