செராவீக் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை சிறப்பு உரை: சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதை பெறுகிறார் - பிரதமர் அலுவலகம் தகவல்

செராவீக் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை சிறப்பு உரையாற்றுகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-04 15:12 GMT
புதுடெல்லி,

நாளை வருடாந்திர சர்வதேச எரிசக்தி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்பட உள்ளது. 

மார்ச் 1 முதல் 5 வரை நடைபெறும் செராவீக் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை மார்ச் (5-ம் தேதி) சிறப்புரையாற்றுகிறார். அப்போது அவருக்கு செராவீக் உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் ஜான் கெர்ரி, மற்றும் மெலிண்டா கேட்ஸ், பில் கேட்ஸ் மற்றும் சவுதி அரம்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமீன் நாசர்  உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

மேலும் செய்திகள்