இளைஞர்கள், பெண்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் - முன்னாள் டெல்லி அழகி
இளைஞர்கள், பெண்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் - முன்னாள் டெல்லி அழகி
புதுடெல்லி,
2019-ம் ஆண்டுக்கான டெல்லி அழகியாக மகுடம் சூட்டப்பட்டவர், மான்சி சேகல். டெல்லியைச் சேர்ந்த இவர் ஒரு பொறியாளர். சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தும் தொழில்முனைவாளரும் கூட.
மான்சி சேகல், ஆத் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ராகவ் சதா முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மான்சி சேகல், ‘டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான ஆட்சியால் நான் கவரப்பட்டேன். எனவே ஆம் ஆத்மி கட்சியில் சேருவது என்று முடிவெடுத்தேன். எந்த ஒரு நாடும் வளம் பெறுவதற்கு, சுகாதாரமும், கல்வியும்தான் இரு முக்கியமான தூண்கள். டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆட்சியின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் இந்த இரு துறைகளிலும் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு, இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும்’ என்று அவர் கூறினார்.