அசாமில் கோவில் வழிபாட்டுடன் பிரச்சாரத்தை தொடங்கும் பிரியங்கா காந்தி
அசாமில் பிரியங்கா காந்தி கோவில் வழிபாட்டுடன் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
கவுகாத்தி,
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, தனது கட்சிக்காக பிரசாரம் செய்வதற்காக இன்று அசாமிற்கு செல்கிறார். தனது இரண்டு நாள் பயணத்தின் போது, அவர் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள பல மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
அப்பகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியுமான ஏஜிபியும் மிகவும் மெஜாரிட்டியுடன் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் பிரியங்கா, முதலில் குவஹாத்தியாக காமக்யா கோவிலுக்கு சென்று கட்சி சார்பாக பிரார்த்தனை செய்த பின்னர், லக்கிம்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.