கல்வி, வேலைவாய்ப்பு சலுகை பெற ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பு உயர்த்த அரசு பரிசீலனை
அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பெறவும், அரசு வேலைவாய்ப்புகளை பெறவும், ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு சலுகை பெறுவதற்கான ‘கிரீமிலேயர்’ ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்துள்ளது.

இதையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுந்தது.
இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல்துறை ராஜாங்க மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் நேற்று எழுத்து மூலம் பதில் அளிக்கையில், “இதர பிற்படுத்தப்பட்டோர் சலுகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை உயர்த்துவதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது” என கூறி உள்ளார்.