லடாக்கில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லடாக்கில் ரிக்டர் 4.2 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2021-02-02 18:58 GMT
கார்கில்,

லடாக்கின் கார்கில் பகுதிக்கு அருகில் நேற்று இரவு 11.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி இருந்தது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் கார்கில் பகுதிக்கு வடக்கே 167 கி.மீ. தூரத்தில் தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்