மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அடுத்து அடுத்து விலகல்

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ள்ளார்.

Update: 2021-02-01 19:25 GMT
கொல்கத்தா, 

மேற்குவங்காளத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா கட்சியி்ல் ஐக்கியமாகி வருகிறார்கள். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரசின் டைமண்ட் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வான தீபக் ஹல்தார் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் எனது பணியை செய்ய கட்சி தலைமை அனுமதிப்பதில்லை. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். இதுகுறித்து மாவட்ட, மாநில தலைமைக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்