இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,427- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,427- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,427- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 11,858- ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். அதேபோல், கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 118- பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 07 லட்சத்து 57 ஆயிரத்து 610- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 04- லட்சத்து 34- ஆயிரத்து 983- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 392- ஆக உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 68- ஆயிரத்து 235- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.