போராட்டம் நடக்கும் இடங்களில் விவசாயிகள் இன்று தொடர் உண்ணாவிரதம்
போராட்டம் நடக்கும் இடங்களில் விவசாயிகள் இன்று தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் நேற்று இதை நிருபர்களிடம் தெரிவித்தார். டெல்லி போராட்ட களத்தில் 11 பேர் கொண்ட குழு, இந்த உண்ணாவிரதத்தை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இதுபோல், அரியானா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை 25-ந் தேதியில் இருந்து 27-ந் தேதிவரை விவசாயிகள் தடுத்து நிறுத்துவார்கள் என்று விவசாய தலைவர் ஜெகஜீத்சிங் டாலிவாலா தெரிவித்தார்.