கேரளாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு - சுகாதாரத்துறை மந்திரி சைலஜா

கேரளாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.;

Update: 2020-12-20 03:07 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலையொட்டி மக்களின் நெருங்கிய நடமாட்டம், கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பதற்கான நிலையை உருவாக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 3 தினங்களாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

எனவே இனி வரும் நாட்களில் பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். எனவே மக்கள் தேவையின்றி வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். குழந்தைகள், முதியவர்களின் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். அடிக்கடி, சோப் மூலம் கைகளை கழுவுங்கள், முக கவசம் அணிய மறக்காதீர்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்