மராட்டியத்தில் மேலும் 3,940- பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் மேலும் 3,940- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-19 14:18 GMT
மும்பை,

மராட்டியத்தில் மேலும் 3,940- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 74 பேர் உயிரிழந்த நிலையில், தொற்றில் இருந்து 3,119-பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 92 ஆயிரத்து 707- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 81 ஆயிரத்து 841 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 648 ஆகும். தொற்று பாதிப்புடன் 61 ஆயிரத்து 095- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்