ஆந்திராவில் ஸ்டீல் தொழிற்சாலையில் திடீர் விபத்து
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஸ்டீல் தொழிற்சாலை ஒன்றில் திடீரென விபத்து ஏற்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் ஸ்டீல் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் உள்ள ஸ்டீல் உருக்கும் பகுதியில் இருந்து திடீரென திரவ வடிவிலான ஸ்டீல் வெளியே விழுந்து பரவியுள்ளது.
இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.