பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தினை விற்க முயன்ற 4 பேர் கைது
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலக புகைப்படம் ஒன்றை ஓ.எல்.எக்ஸ். வலைதளத்தில் வெளியிட்டு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
வாரணாசி,
உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் அமைந்த பிரதமர் மோடியின் அலுவலகத்தினை புகைப்படம் எடுத்து அதனை ஓ.எல்.எக்ஸ். வலைதளத்தில் வெளியிட்டு, விற்பனைக்கு உள்ளது என சில மர்ம நபர்கள் பதிவிட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வாரணாசியின் ஜவகர் நகர் காலனி பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களில் அலுவலக புகைப்படம் எடுத்த நபரும் ஒருவர். இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.