டெல்லியில் இன்று 1,547 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,11,994 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-12-16 15:02 GMT
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 1,547 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,11,994 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 10,147 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,734 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,88,586 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 13,261 பேர் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்