கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்களை மத்திய விசாரணை அமைப்புகள் தடுக்க முயற்சி செய்வதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்களை மத்திய விசாரணை அமைப்புகள் தடுக்க முயற்சி செய்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கண்ணூரில் அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் மத்திய விசாரணை அமைப்புகள், கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
கேரள அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு மத்திய விசாரணை அமைப்புகள் துணை போவதாகவும் அவர் புகார் கூறினார். கேரளாவில் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் அதன் பெயரில் யாரிடமிருந்தும் பணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.