குஜராத்தில் சொத்து தகராறில் தாய், 3 குழந்தைகள் மீது ஆசிட் வீச்சு சகோதரர்கள் வெறிச்செயல்

வீட்டை தங்களுக்கு திரும்பக் கொடுத்துவிடுமாறு, வீட்டை விற்றவரின் மகன்களான சகோதரர்கள் அஜய் தந்தானி, விஜய் மிரட்டி வந்துள்ளனர்.

Update: 2020-12-12 19:06 GMT
ஆமதாபாத், 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர், லட்சுமிபென் தந்தானி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தனது 2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டை தங்களுக்கு திரும்பக் கொடுத்துவிடுமாறு, வீட்டை விற்றவரின் மகன்களான சகோதரர்கள் அஜய் தந்தானி, விஜய் மிரட்டி வந்துள்ளனர். அதற்கு லட்சுமிபென் மறுத்துவந்திருக்கிறார்.

இந்நிலையில், லட்சுமிபென் நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் மீது அஜயும் விஜயும் ஜன்னல் வழியாக ஆசிட்டை வீசினர்.

அதில் முகத்தில் படுகாயமடைந்த லட்சுமிபென்னும், 5 முதல் 14 வயதுக்கு உள்பட்ட அவரது குழந்தைகள் மூவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சகோதரர்கள் இருவர் மீதும் கொலைமுயற்சி, ஆசிட் வீச்சு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்