விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி உள்ளனர்-ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டதாக ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுடெல்லி
ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது;-
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன் இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு 24 மணிநேரமும் தயாராக உள்ளது. வேளாண்மை சட்டங்களில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் . குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
எப்போதுமே விவசாயிகள் கை ஓங்கி இருப்பதை வேளாண் சட்டம் உறுதி செய்கிறது. விவசாயிகள் அழைப்பு விடுத்த வேலை நிறுத்தத்துக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. விவசாயிகளின் போராட்டத்தைப் பார்க்கும்போது, மாவோயிஸ்ட்கள், இடது சாரி இயக்கங்கள் ஊடுருவி விட்டனர் என்று தெரிகிறது என கூறினார்.