மத்திய பிரதேசத்தில் 2 பெண் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய தாக்குதலில் 2 பெண் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;

Update: 2020-12-12 07:45 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிர்னாபூர் சரக காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அந்த பகுதியில் நேற்று இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. அதிகாலை 12.30 மணியளவில் ஒரு பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அடுத்த 45 மணி நேரத்தில் இன்னொரு நபரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். 

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரும் பெண்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்