திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வயதானவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வயதானவர்களும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது;

Update: 2020-12-12 03:56 GMT
திருப்பதி,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கை ஏற்று மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்