அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரிப்பு மத்திய அரசு தகவல்

கொரோனா பொது முடக்கம் காரணமாக நாட்டின் தொழில்துறை உற்பத்தி முடங்கியது.

Update: 2020-12-11 19:46 GMT
புதுடெல்லி,

கொரோனா பொது முடக்கம் காரணமாக நாட்டின் தொழில்துறை உற்பத்தி முடங்கியது. பின்னர் படிப்படியாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி, 3.6 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தொழில்துறை உற்பத்திக்குறியீடு (ஐ.ஐ.பி.) தெரிவித்து உள்ளது.

இதில் குறிப்பாக உற்பத்தி மற்றும் மின்சார உற்பத்தி துறைகள் ஏற்றம் கண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்தவகையில் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் முறையே 3.5 மற்றும் 11.2 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக ஐ.ஐ.பி. கூறியுள்ளது.

அதேநேரம் சுரங்கத்துறை 1.5 சதவீதம் சரிவை சந்தித்திருப்பதாகவும் ஐ.ஐ.பி.யில் குறிப்பிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்