மராட்டியத்தில் மேலும் 4,268- பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் மேலும் 4,268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-11 17:18 GMT
மும்பை,

மராட்டியத்தில் இன்று 4,268- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  18 லட்சத்து 72 ஆயிரத்து 440- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 059 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து இன்று  2,774-பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 49 ஆயிரத்து 973- ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 73,315- ஆக உள்ளது. அம்மாநிலத்தில்  தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93.46 சதவிகிதமாக உள்ளது.

மேலும் செய்திகள்