மேகாலயா முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மேகாலயா முதல் மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-12-11 10:38 GMT
ஷில்லாங்,

மேகாலயா முதல் மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்து வந்துள்ளது.  அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பாதிப்பு இருப்பது எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அதனால், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன்.

லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன.  கடந்த 5 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.  தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கேட்டு கொள்கிறேன்.  பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்