அரியானாவில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
அரியானாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் என்ற பகுதியில் இன்று அதிகாலை 12.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பதட்டமடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். சோனிபத் பகுதிக்கு தென்மேற்கில் சுமார் 4.8 கி.மீ. தூரத்தில், தரைப்பகுதியில் இருந்து 14 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.