டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் - நிபுணர்கள் கருத்து

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-11-30 19:31 GMT
புதுடெல்லி, 

நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் கொரோனா தொற்று அதிகமாகப் பரவ வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் துறைத் தலைவரான சமிரான் பாண்டா, கொரோனா பரவலைத் தடுக்க பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றார்.

ஆசியா, ஓசியானியா மருத்துவ சங்க கூட்டமைப்பு தலைவர் கே.கே.அகர்வால் கூறும்போது, விவசாயிகளின் இதுபோன்ற போராட்டத்துக்கு அரசு அனுமதி அளித்திருக்கக்கூடாது என்றார்.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் சமூக மருத்துவத் துறை பேராசிரியர் சஞ்சய் ராய், இதுபோன்ற போராட்டங்கள் கொரோனா தொற்றை தடுக்கும் அரசின் முயற்சிகளைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்