நவீன உடனடி எதிர்தாக்குதல் ஏவுகணை சோதனை வெற்றி
5 நாள்களுக்குள்ளாக 2-ஆவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.;
தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான நவீன உடனடி எதிர்தாக்குதல் ஏவுகணை சோதனையில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது.
வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட ஏவுகணை கடந்த 2 நாள்களுக்குள் 5-ஆவது முறையாக சோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இதே வகையிலான ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.