கொரோனா பாதித்த காங்.எம்.பி அகமது படேல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

Update: 2020-11-15 12:27 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி  கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் குருகிரமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அகமது படேல்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில், அகமது படேல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகமது படேல் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்