எல்லையில் அத்துமீறி தாக்குதல்: பாக். தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-11-14 14:42 GMT
புதுடெல்லி,

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் ராணுவம் திருந்த மறுக்கிறது. 

இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில்  பொதுமக்கள்4  பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு பாகிஸ்தான் துணைத் தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் விடுத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி, பண்டிகை காலத்தில் அமைதியை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது என வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்