மூன்றாம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு மாறும்- ரிசர்வ்வங்கி

மூன்றாம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு மாறும் என ரிசர்வ்வங்கி கூறி உள்ளது.

Update: 2020-11-12 07:23 GMT
புதுடெல்லி

இந்தியப் பொருளாதாரம் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.6 சதவீதம் வீழ்ச்சியடையும் எனப் பணக்கொள்கைக்கான குழு கணித்திருந்தது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்துக்கான பொருளாதாரப் புள்ளி விவரங்களின்படி வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு வரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

மேலும் செய்திகள்