கொரோனா தடுப்பு மருந்து-சர்வதேச ஒத்துழைப்பு பிரதமர் மோடியை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு தலைவர்

கொரோனா தடுப்பு மருந்து-சர்வதேச ஒத்துழைப்பு பிரதமர் மோடியை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு தலைவர் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பு தலைவர் பாராட்டினார்.

Update: 2020-11-12 06:24 GMT
புதுடெல்லி

கொரோனா தொற்றுநோயை சமாளிப்பதற்கான தற்போதைய கூட்டாண்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸும் நேற்று  தொலைபேசியில் உரையாடினர். அப்போது  நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவத்தையும் சேர்ப்பது குறித்து பேச்சு நடந்தது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பின் தலைவரிடம் பேசினார். தொற்றுநோயை சமாளிக்க உலகளாவிய கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் அமைப்பின் முக்கிய பங்கை பிரதமர் பாராட்டினார். மற்ற நோய்களுக்கு எதிரான போராட்டம் சமமாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த உரையாடலின் போது, ​​ஆயுஷ்மான் பாரத் மற்றும் காசநோய்க்கு எதிரான பிரச்சாரம் போன்ற இந்தியாவின் உள்நாட்டு முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு தலைவர் பாராட்டினார். உலக சுகாதாரத்திலும் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அவர் கூறினார் என அதில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் கெப்ரெஸ் வெளியிட்டு உள்ள டுவீட்டில்  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவரை பாராட்டினார். அவர் தனது டுவீட்டில், 'நமஸ்தே, பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் பாரம்பரிய மருத்துவத்தில் அறிவு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான அணுகலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் அதில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் நீங்கள் மேற்கொண்ட மிகவும் அர்த்தமுள்ள உரையாடலுக்கு நன்றி' என்று கூறி உள்ளார். 

தனது இரண்டாவது டுவீட்டில், கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை அவர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்