தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு
தமிழக அரசுக்கு நவம்பர் மாதத்திற்கான நிதியாக ரூ.335.41 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 13 மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்திற்கான நிதியாக ரூ.6,157.74 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு ரூ.491.41 கோடியும், மேற்கு வங்க மாநிலத்திற்கு 417.75 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு ரூ.1,276.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.