இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,07,754-ஆக உயர்ந்துள்ளது.
அதே போல 49,083 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,68,968-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 559 பேர் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,26,121-ஆக அதிகரித்தது. இதனால் உயிரிழப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 10-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,12,665 போ சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 6.03 சதவீதமாகும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.