கேரளாவில் இன்று மேலும் 7,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 7,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-06 14:48 GMT
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஆனால் டெல்லி, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும்  7,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,73,569 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,640 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 7,854 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,88,504 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 83,208 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்