அணுகவும் அடித்து காயப்படுத்த ரூ.10 ஆயிரம்; கொலை செய்ய ரூ.55 ஆயிரம் ஒரு கூலிப்படை விளம்பரம்

அடித்து காயப்படுத்த ரூ.10 ஆயிரம் கொலை செய்ய ரூ 55 ஆயிரம் மட்டுமே அணுகவும் என டெலிபோன் எண்களுடன் ஒரு கூலிப்படை வாலிபர் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து விளம்பரம் வெளியிட்டு உள்ளார்.;

Update: 2020-11-05 07:03 GMT
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் தங்களது கூலிப்படை பணத்திற்காக மக்களைத் தாக்கவோ கொலை செய்யவோ அதற்கான விலைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது.

உத்தரபிரதேசததை சேர்ந்த கூலிப்படை கும்பல் மக்களைத் துன்புறுத்துவது முதல் அவர்களைக் கொலைசெய்வது வரையிலான குற்றங்களைச் செய்ய வசூலிக்கப்படும் விலைபட்டியல் குறித்து ஏராளமான விளம்பர படங்கள்  சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு உள்ளன. 

கூலிப்படை குறித்த விளம்பரத்தில் ஒரு வாலிபர
துப்பாக்கியைப் பிடித்து கொண்டு இருக்கிறார்

அதில்குறிப்பிட்டு உள்ள விளம்பர படத்தில், இந்த தொகை ரூ.10,000-55,000 வரை குறிப்பிடப்பட்டு உள்ளது, யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அவர்களை அடிக்க வேண்டுமா ரூ.5 ஆயிரம், அவர்களை அடித்து  காயப்படுத்த வேண்டுமா,ரூ.10,000 அதிகபட்சமாக கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது.  மேலும்  தொடர்பு கொள்ள டெலிபோன் எண்ணும்  துப்பாக்கிகள் படமும் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த விலைப்பட்டியல் சமூக வலைதளத்தில் வைரலானது. இது உத்தரபிரதேச காவல்துறையினரின் கவனத்திற்கும் சென்றது.  மேலும் மக்களை காயப்படுத்திய அல்லது அச்சுறுத்தியதற்காக இந்த விளம்பர விலைப்பட்டியலை  பதிவேற்றிய நபரை அவர்கள் தேடத் தொடங்கினர்.

இதுகுறித்த விலைப்படியலை பதிவேற்றிய இளைஞர்கள் சரதவல் காவல் நிலைய பகுதியின் சவுக்கடா கிராமத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இங்குள்ள இளைஞன்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்