ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை செய்தால் ரூ.10,000 அபராதம் என அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் தடையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.;

Update: 2020-11-03 16:58 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா பாதித்தவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவிற்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் இதனால் மிகவும் பாதிப்படைவார்கள் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை ராஜஸ்தான் அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடையை மீறி ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு வெடிப்பவர்கள் அல்லது அதற்கு அனுமதி அளிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ராஜஸ்தான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்