கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் 4 ஆயுர்வேத மருந்துகள் பயனுள்ளதாக உள்ளது - அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் 4 ஆயுர்வேத மருந்துகள் பயனுள்ளதாக உள்ளது என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-02 03:19 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு மருந்துகள் அவசர காலத்தில் சோதனைரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் மருத்துவர்கள் குழு கூறுகிறது.

குறிப்பாக ஆயுஷ் குவாதா, சன்ஷாமனிவாடி, பிபட்ரோல் மாத்திரைகள் மற்றும் லக்ஸ்மிவிலாசராசா ஆகியவை, கொரோனா நோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், சிகிச்சையின் 6 நாட்களுக்குள் துரித ஆன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவை தருகிறது என அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்