ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் ஹிஸ்புல் முகாஜிதின் இயக்க தலைமை தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

Update: 2020-11-01 12:37 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான ரங்ரெத் என்ற இடத்தில்   பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிபிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முகாஜிதின் இயத்தின் புதிய தலைமை தளபதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் ஹிஸ்புல் முகாஜிதின் இயக்க தலைமை தளபதி ரியாஸ் நைகூ கொல்லப்பட்டதையடுத்து, புதிய தலைமை தளபதியாக இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சாய்புல்லா பொறுப்பேற்றுக் கொண்டான். 

இந்த என்கவுன்டரின் போது மேலும் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மிகப்பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்