தமிழ்நாடு தினம்: மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும் - வெங்கைய்யா நாயுடு தமிழில் டுவிட்

தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும் என்று துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.;

Update: 2020-11-01 07:53 GMT
புதுடெல்லி, 

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன்படி சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.  சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி நவம்பர் 1-ம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும் என்று துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மாநில தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். செழிப்பான கலாச்சார வரலாறு, கண்கவர் கட்டிடக்கலை, அழகுமிளிர் கடற்கரை மற்றும் பலதரப்பட்ட நில அமைப்புக்களுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றது. வரும் காலங்களில் இந்த மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்