மேற்கு வங்கத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருக்கும் மக்கள்: கண்காணிக்க 17 ஆயிரம் டாக்டர்கள் ஈடுபடுத்த மாநில அரசு முடிவு
மேற்கு வங்காளத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதாகவும், நோய் முற்றிய பிறகு டாக்டர்களை தேடி ஓடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் 97 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலர், கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதாகவும், நோய் முற்றிய பிறகு டாக்டர்களை தேடி ஓடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, வீட்டு தனிமையில் உள்ள அவர்களை கண்காணிக்கும் பணியில் 17 ஆயிரம் டாக்டர்களை ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நோயாளிகளும், அவர்களை கண்காணிக்க வேண்டிய டாக்டர்களும் அடங்கிய பட்டியலை உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்க உள்ளன. நோயாளிகளுடன் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து, உடல்நிலையை கண்காணிப்பார்கள். உடல்நிலை மோசமடைந்தால், உள்ளாட்சி அமைப்புக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிப்பார்கள்.