ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.
இதன்படி, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில், சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹத்ராஸ் வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.