"நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள்" - பீகார் மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்
நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் என்று பீகார் மக்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
பீகார் சட்டசபையின் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நிதிஷ்குமார் ஆட்சியில், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் கண்ணீர் கவலையுமாக இருப்பதாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தின் பலவீனமான நிலையால் பீகார் மக்களின் வாழ்க்கையை மூடிமறைக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், பயம், குற்றங்களில் ஊறி திழைக்கும் இந்த நிதிஷ்குமார் அரசால் புதிய பீகாரை உருவாக்க இயலாது என குற்றம்சாட்டினார்.
மேலும் மாற்றத்திற்கான சரியான நேரம் இது என்பதால், அதிகாரம், ஆணவத்தில் மூழ்கியுள்ள நிதிஷ்குமார் அரசை தூக்கி எறிந்து புதிய பீகாரை உருவாக்க பீகார் மக்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.