வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஒடிசா கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மணிக்கு 24 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் வடமேற்கு வங்க கடல் பகுதியில், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 50 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபுரா பகுதிக்கு மேற்கு மற்றும் தென்மேற்கே 200 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதனையொட்டியுள்ள பங்காளாதேஷ் கடற்கரையை சாகர் தீவுகள் மற்றம் கேபுபாரா பகுதிக்கு இடையே சுந்தர்பன்ஸ் பகுதியில் இன்று கரைகடக்கும் எனத் தெரிகிறது.
இதனால் திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.