மனித உரிமைகள் என்ற சாக்குபோக்கில் சட்ட விதிகளை மீறுவதை ஏற்க முடியாது- வெளியுறவுத்துறை அமைச்சகம்

மனித உரிமைகள் என்ற சாக்குபோக்கில் நடைபெறும் சட்ட விதிமீறல்களை மன்னிக்க முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு பதிலடி கொடுத்துள்ளது.;

Update: 2020-10-20 23:56 GMT
மிட்செல் பேச்லெட்
புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்  தொடர்பாகவும் என்.ஜி.ஓக்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாகவும் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிட்செல் பேச்லெட் தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். 

மேலும்,   சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் தனது அதிருப்தியை கூறியதோடு, என்.ஜி. ஓ மற்றும் மனித உரிமைகளை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 

இந்த நிலையில், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் கருத்துக்கு இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “  இந்தியா, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒரு சுதந்திரமான  நீதித்துறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக அரசியல் நாடாகும்.  

சட்டங்களை உருவாக்குவது என்பது  இறையாண்மை உரிமையாகும். மனித உரிமைகள் என்ற சாக்குபோக்கில் நடைபெறும் சட்ட விதிமீறல்களை மன்னிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்