முக கவசங்களை தவிர்ப்பது குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும்; பிரதமர் மோடி உரை

முக கவசங்களை அணியாமல் நீங்கள் வெளியே செல்வது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும் என்று பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.;

Update: 2020-10-20 13:11 GMT
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, சமீபத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நாம் பார்த்தோம்.  அதில், மக்கள் எதனையும் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தது தெளிவாக தெரிந்தது.  இது சரியல்ல.

நீங்கள் முக கவசங்களை அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால், அது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும்.  நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.  அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளாகட்டும்.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதலில் குறைந்தது.  பின்பு திடீரென அதிகரித்தது என்று முக கவசங்களை அணிய வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.

மேலும் செய்திகள்