காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க பதுங்கு குழி அழிப்பு; ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பதுங்கு குழியை கண்டறிந்து, அழித்து, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.;
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் கவனி பகுதியில் காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ராஷ்டீரிய ரைபிள் படையை சேர்ந்த 55 வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப். படையின் 185 வீரர்கள் இணைந்து கூட்டாக பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பதுங்கு குழி ஒன்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து, வெடிக்க கூடிய பொருட்கள் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுக்கான 2,091 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள், பிஸ்டல் ஒன்று, 3 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.