ஒரு வருடமாக கணவனால் கழிவறைக்குள் சிறை வைக்கப்பட்ட பெண்
ஒரு வருடமாக கணவனால் கழிவறைக்குள் பூட்டிவைக்கப்பட்ட பெண்ணை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர்.;
பானிபட் (அரியானா):
அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில்ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்டார் அந்த பெண்ணை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா தனது குழுவினருடன் மீட்டார்.
இது குறித்து ரஜினி குப்தா பெண்ணை மீட்டதாக கூறியதாவது:-
"ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கழிவறையில் பூட்டப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் எனது குழுவுடன் அங்கு சென்றேன். நாங்கள் இங்கு வந்தபோது, அது உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம். பெண் பல நாட்களாக எதையும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது.
"அவர் மனநிலை பாதிக்கபட்டவர் என கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. நாங்கள் அவருடன் பேசினோம், அவர் நல்ல நிலையில் உள்ளவர் என தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் அவளை மீட்டு தலைமுடியைக் கழுவினோம். நாங்கள் போலீஸ் புகார் அளித்துள்ளோம். அதன்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள், "என்று கூறினார்.
இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.