ஆஸ்பத்திரியை சேதப்படுத்திய வழக்கு: குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் ஜெயில் - கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

ஆஸ்பத்திரியை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக, குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2020-10-14 22:00 GMT
ஜாம்நகர், 

குஜராத்தின் ஜாம்நகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராகவ்ஜி படேல். இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு ஜாம்நகரில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியை சேதப்படுத்தி டாக்டருக்கு மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, ஜாம்நகரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே எம்.எல்.ஏ. மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக மாநில அரசு கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் எம்.எல்.ஏ. உள்பட 5 பேருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்