மராட்டிய காவல்துறையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று புதிதாக 98 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-10-14 13:28 GMT
மும்பை,

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்பட்டது.  இதையடுத்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக மராட்டிய காவல்துறையிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,232 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் 1 காவலர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 22,917 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,052 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்